பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் -Anmeega Thagaval

Agathiyan
By -
0

 🌹 🌿 பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் 🌿🌹





🌹 🌿 ஆன்மிகம்ஆன்மிக தகவல்கள்

வெள்ளிக்கிழமை காலை, வாசலில் இந்த கோலம் போட்டால், மகாலட்சுமி சந்தோஷமாக வீட்டிற்குள் வருவாள்!


🌹 🌿 வெள்ளிக்கிழமை அன்று சில விஷயங்களை செய்யக்கூடாது என்று, நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் இன்று நாம் எத்தனையோ பழக்கங்களை வெள்ளிக்கிழமை அன்று, செய்யக்கூடாத சில விஷயங்களை நேரமின்மை காரணமாக, செய்து கொண்டுதான் இருக்கின்றோம். இருப்பினும் குறிப்பிட்ட இந்த தினத்தில் இதையெல்லாம் செய்யவே கூடாது என்றும், குறிப்பிட்ட சில விஷயங்களை செய்தால் மகாலட்சுமி எந்தவிதமான தடையும் இல்லாமல் நம் வீட்டிற்குள் வருவாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.


🌹 🌿 காலை எழுந்தவுடன் பெண்களுக்கு வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கம் இருக்கும். வெள்ளிக்கிழமை அன்று, காலை உங்கள் வாசலில் தாமரை பூ கோலம் போடுவது மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்காக மற்ற கோலங்களை எல்லாம் போட்டால் தவறு இல்லை. இருப்பினும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தாமரைப் பூக்கோலம் லட்சுமி கலாச்சாரத்தை அதிகப்படியாக உண்டாகும்.


🌹 🌿 மற்ற நாட்களில் எல்லாம் சமையலறையை சுத்தம் செய்யாமலே, சமைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தாலும், (எந்த நாட்களிலும் சமையலறையை சுத்தம் செய்யாமல் சமையலை, காலையில் தொடங்கக்கூடாது தான்) வியாழக்கிழமை இரவு மட்டுமாவது எச்சில் பாத்திரங்களை சமையலறையில், அப்படியே போட்டு வைக்காமல் சமையலறையை சுத்தமாக சுத்தம் செய்துவிட்டு, வெள்ளிக்கிழமை காலை நீங்கள் உங்களது சமையலறையை, லட்சுமிகலாட்சியத்தோடு தொடங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.


🌹 🌿 வெள்ளிக்கிழமை காலை 6 மணி நேரத்தில் சமையலறையில் எச்சில் பாத்திரமும், துடைக்கப்படாத மேடையும், அடுப்பும் அவ்வளவு சரியல்ல. வெள்ளிக்கிழமை அன்று வீடு கூட்டும் போது சில பெண்கள் மறதியாக, வீடு கூட்டும் துடைப்பத்தால் கதவு ஓரங்களில், ஜன்னல் ஓரங்களில், மூலைமுடுக்குகளில் இருக்கும் ஒட்டடைகளை சுத்தம் பண்ணி எடுப்பார்கள்.


🌹 🌿 அதாவது, ஒட்டடைக்குச்சி இல்லாமல், வேறு ஒரு கிழமைமையில் கூட, துடைப்பத்தால் ஒட்டடை அடிப்பது தவறு. எப்போதுமே ஒட்டடையை துடைப்பத்தால் தட்டக்கூடாது. ஒட்டடைக்குச்சியால் தான் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று கூட்டும்போது அங்கங்கே ஒட்டடையை பார்த்தாலும் அதை சுத்தம் செய்யக்கூடாது.


🌹 🌿 முடிந்தவரை உங்கள் வீட்டில் ஒட்டடையை சுத்தம் செய்யும் வேலையை ஆண்களிடம் கொடுத்து விடுங்கள். பெண்கள் செய்வது அவ்வளவு உத்தமம் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. எந்த கிழமைமையாக இருந்தாலும் சரி, மாலை 4.30 மணிக்கு முன்பாக உங்களது வீட்டை கூட்டி விடுங்கள். அதாவது காலை ஒரு வேளை வீட்டை கூட்டுவார்கள், மாலை ஒருவேளை வீட்டை கூறுவார்கள் அல்லவா?


🌹 🌿 வெள்ளிக்கிழமை என்றாலே துவரை பருப்பு சமைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். உங்களால் பருப்பை தனியாக சமைக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. நீங்கள் சாதம் வடிப்பீர்கள் அல்லவா? அதில் ஒரு நான்கு துவரம்பருப்பை சேர்த்து போட்டு வேக வைத்து வடித்து விடுங்கள் அவ்வளவுதான்.


🌹 🌿 இப்போதெல்லாம் தினம்தோறும் துணி துவைக்கும் பழக்கம் என்பதே இல்லை. அந்த காலங்களில் எல்லாம் அழுக்குத் துணியை இப்படி எடுத்து வைக்க மாட்டார்கள். தினம் தோறும் இருக்கும் அழுக்கு துணியை, தினம்தோறும் துவைத்து வைப்பார்கள். இன்று நேரமின்மை காரணமாக, ஆண்கள் பெண்கள் எல்லோரும் வேலைக்கு செல்வதன் காரணமாக அழுக்குத் துணிகளை சேர்த்துவைக்கும் சூழ்நிலை. சில பேர் வீடுகளில் அந்த அழுக்கு துணிகளை எல்லாம் வெள்ளிக்கிழமை அன்று காலை மொத்தமாக துவைப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. முடிந்தால் வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்து வைத்துவிடுங்கள்.


🌹 🌿 முடியாதவர்கள் அந்த அழுக்கு துணிகளில் வாடை வெளியே தெரியாத அளவிற்கு, ஏதாவது ஒரு கூடையில் போட்டு மூடி வீட்டிற்குள், யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக எடுத்து வைத்து விட வேண்டும். சனிக்கிழமை துவைத்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமையன்று மூட்டையாக சேர்த்து வைத்திருக்கும் அழுக்குத்துணி கட்டாயம் துவைக்கக் கூடாது. அதாவது ஒரு நாள் துணியை துவைப்பதில் தவறில்லை. சேர்த்துவைத்த துணியை கட்டாயம் துவைக்கக் கூடாது. அது தரித்திரத்தை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.


🌹 🌿 சில பேர் வீடுகளில் எல்லாம் குப்பைத் தொட்டியும், குப்பை வாறும் முரமும், பார்க்கவே படு மோசமாக இருக்கும். குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும். இந்த நாற்றம் வீசாமல் அந்த குப்பை தொட்டியையும், குப்பை வாறும் முறம், துடைப்பம், இவை மூன்றையும், வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்து, வெயிலில் காய வைப்பது பெண்களின் கட்டாயக் கடமை. குறிப்பாக அந்த துடைப்பதில், சில பேர் வீடுகளில் முடி சுற்றிக்கொண்டு இருக்கும் பாருங்கள்! அதை எடுக்கவே மாட்டார்கள். கூட்டி முடித்தபின்பு அந்த முடியை எல்லாம் சுத்தமாக அந்த துடைப்பத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும். இப்படி செய்யும் பட்சத்தில் வீட்டிற்குள் மூதேவி வாசம் செய்ய மாட்டாள்.


🌹 🌿 நாம் வழக்கமாக பூஜை செய்யும் பொழுது அல்லது ஆன்மீக ரீதியான விஷயங்களை கடைபிடிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? அல்லது எப்படி செய்ய வேண்டும்? என்கிற குழப்பங்கள் ஏற்படுவது உண்டு. எவ்வளவோ விஷயங்கள் நமக்குத் தெரியாமல் ஆன்மீகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை முறையாக கடைபிடித்தால் நம்முடைய வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும். அப்படியான சில விஷயங்களைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.


🌹 🌿 இந்த விஷயங்களை எல்லாம் நிச்சயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நாம் விசேஷ அல்லது அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது கூட நிவேதனமாக தேங்காயை வைப்பது வழக்கம். அப்படி வைக்கும் தேங்காயை தாராளமாக நாம் சமையலுக்கு உபயோகிக்கலாம். அதில் எந்த சந்தேகமும் நீங்கள் கொள்ள தேவை இல்லை. ஆனால் அந்த தேங்காயில் சமைத்த உணவு பொருட்களை நிவேதனமாக மறுபடியும் தெய்வங்களுக்கு படைக்கக் கூடாது என்பது நியதி. இந்த தவறை இனி ஒருபோதும் செய்து விடாதீர்கள்.


🌹 🌿 அது போல் நைவேத்யங்களை படைக்கும் பொழுது நேரடியாக உலோகப் பாத்திரங்களில் படைக்கப்படாமல் இயற்கையாக கிடைக்கும் வாழை இலை அல்லது தெய்வீக இலைகளை வைத்து அதன் மேல் நைவேத்யம் படைப்பது சிறந்த முறையாகும். நீங்கள் கோவிலுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் வீட்டில் கோலம் போட்டு விட்டு தான் செல்ல வேண்டும். அது போல் வீட்டில் விளக்கேற்றி விட்டு பின்னர் கோவிலுக்கு செல்வது தான் நல்லது.


🌹 🌿 வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதில் இருக்கும் நெய் அல்லது எண்ணையை வெறும் கைகளால் தொடக் கூடாது. விளக்கில் இருக்கும் எண்ணையை எந்த காரணம் கொண்டும் நம்முடைய தலையில் தடவிக் கொள்ள கூடாது. இது மிகப்பெரிய தெய்வ குத்தம் ஆகிவிடும்.


🌹 🌿 பொதுவாக கோவில்களில் தெய்வ தரிசனத்தை முடித்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு வருவது வழக்கம். ஆனால் மகாலட்சுமி வீற்றிருக்கும் விஷ்ணு கோவில்களில் இவ்வாறு அமரக்கூடாது. இந்தக் கோவிலில் இருந்து நாம் வீட்டிற்கு செல்லும் பொழுது மகாலட்சுமி ஆனவள் நம்முடன் வருவதாக ஐதீகம் உள்ளது. எனவே எங்கும் அமராமல் நேராக வீட்டிற்கு திரும்ப வேண்டும்.


🌹 🌿 வீட்டில் குபேரர் சிலையை அனைவரும் பார்க்கும் வண்ணம் வாசலுக்கு நேரெதிராக அமைத்து வைப்பது செல்வ வளத்தை அதிகரிக்கும். நீங்கள் பணம் சேமிக்கும் உண்டியல் குபேரன் பொம்மை போன்று இருப்பது மிகவும் நல்லது. அத்தகைய உண்டியல்கள் விற்பனைக்கு உள்ளன.


🌹 🌿 தலைவாசலில் கதவிற்கு உட்பக்கமாக ஸ்ரீ சக்கரம், சுவஸ்திக் அல்லது ஓம், திரிசூலம் போன்ற சின்னங்களை வரைந்து வைப்பது அல்லது ஸ்டிக்கர் வாங்கி ஓட்டி வைப்பதும் வீட்டின் பாதுகாப்பு அரணாகவும், அதிர்ஷ்டம் பெருகவும் துணையாக இருக்கும். இந்தச் சின்னங்களை நீங்கள் நல்ல காரியத்திற்கு வெளியே செல்லும் பொழுது உங்களுடைய பர்ஸ் அல்லது சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்வதால் காரிய வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.


🌹 🌿 பூஜை அறையில் பூஜை செய்வதற்கு பக்தி என்கிற பெயரில் எப்பொழுதும் நிறைய சாமி படங்களை வாங்கி அடுக்கி வைக்க கூடாது. இருக்கும் படங்களையும் நெருக்கமாக கட்டாயம் வைக்க கூடாது. ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் நிச்சயம் இடைவெளி இருக்க வேண்டும். தெய்வப் படங்கள் சேதம் அடைந்திருந்தால் அவற்றை அருகில் இருக்கும் கோவில்களில் கொண்டு போய் வைத்து விடுவது நல்லது. வீட்டில் வைத்திருக்காதீர்கள்.

Post a Comment

0Comments

Post a Comment (0)