பஞ்சாங்கத்தின் அங்கம் யோகம் -1
நிலவு 27 நாட்களில் 27 விண்மீன்களை புவியின் கோணத்தில் இருந்து கணக்கிட்டால் கடந்து செல்கிறது.
ஒரு முழு சுற்றளவு 360 டிகிரி என்றால், அதை 27 ஆல் வகுத்தால் 13 டிகிரி 20 நொடி. இதற்கு ஒரு யோகம் எனப் பெயர். 27 யோகங்கள் உள்ளன.
ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவுகிறது.
யோகம் வகைகள் மற்றும் யோகம் பொருள்
1.விஷ்கம்பம் - மனநடுக்கம்
2. ப்ரீதி - அன்பு, பாசம்
3. ஆயுஷ்மான் - வாழ்நாள்
4. சவுபாக்கியம் - புண்ணியம்
5. சோபனம் - நலம்
6. அதிகண்டம் - பெரிய இடரல்கள்
7. சுகர்மம் - அறம்
8. திருதி - துணை
9. சூலம் - சில திசைப் பயண இடையூறுகள்
10. கண்டம் - இடர்பாடுகள்
11. விருத்தி - ஆக்கம்
12. துருவம் - நிலையான தன்மை பெறுதல்
13. வியாகாதம் - பாம்பு முதலானவற்றால் அச்சம்
14. அரிசனம் - மகிழ்ச்சி
15. வச்சிரம் - ஆயுதங்களால் தொல்லை
16. சித்தி - வல்லமை
17. வியதீபாதம் - கொலை
18. வரியான் - காயம்
19. பரிகம் - தாழ்வு
20. சிவம் - காட்சி
21. சித்தம் - திறன்
22. சாத்தியம் - புகழ்
23. சுபம் - காவல்
24. சுப்பிரம் - தெளிவு
25. பிராம்மம் - மாயை
26. மாஹேத்திரம் - படைப்புகளை பற்றிய அறிவு
27. வைத்திருதி - பேய்களால் தொல்லை.
இந்த 27 யோகங்களின் பலன்கள்
1. விஷ்கம்பம் -
மனநடுக்கம் (விஷ் யோகம்): இது அசுப யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பகைவர்களை எளிதில் வெற்றி கொள்வார்கள். பிறரை குறித்து உடனடியாக அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப் போவதை முன் கூட்டியே உணரும் தன்மை இவர்களுக்கு இருக்கும்.
மாந்திரீகம் தொடர்பானவற்றில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான விடுதலை விரும்பிகள். உற்றார், உறவினர், சுற்றங்களை மதிப்பார்கள்.
2. ப்ரீதி :
இது சுபமான யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இனிய சொல் பேசுபவராகவும், நல்ல சிந்தனை கொண்டவராகவும், நல்ல செயல்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
பெரியோர்கள், ஞானிகள், மகான்கள், குரு ஆகியோர்களை மதிப்பவராகவும் அவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள். உறுதியான மனமும், செயல் பாட்டுத் திறமையும் இவர்களிடத்தே இருக்கும்.
3. ஆயுஷ்மான் -
வாழ்நாள் (ஆயு யோகம்): இது சுப யோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி யோகிகள் நீடுழி பல்லாண்டு வாழ்க (ஆயுஷ்மான் பவ) என்று இந்த யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு.
பிறரை வாழ்த்தவே இந்த யோகத்தின் பெயர் பயன்படுகிறது என்றால், அதற்கு ஏற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் மகிழ்வான வாழ்கை வாழ்வார்கள்.
4. சவுபாக்கியம் -
புண்ணியம் (செள யோகம்): இது சுபமான யோகம். செள என்ற வடமொழி சொல்லிற்கு நூறு என்று பொருள். பாக்கியம் என்றால் கொடுப்பினை என்று பொருள். செளபாக்யம் என்றால் 100 கொடுப்பினைகள் என்றாகிறது. பெயரே 100 கொடுப்பினை எனும் போது இவர்களின் வாழ்வு நன்றாகவே இருக்கும்.
இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்கு உடையவர்களாகவும், உறுதியான மனம் படைத்தவராகவும், செயல் திறன் மிக்கவர்களாகவும், நல்ல கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், ஈவு இரக்கம் உடைய கொடையாளராகவும் இருப்பார்கள்.
5. சோபனம் -
நலம் (சோ யோகம்): இது சுப யோகம். சோபனம் என்று பெயர் வைக்கிரார்களே! சோபனம் என்றால் மகிழ்சி என்று பொருள்.
இதன் பொருள் இனிமையான மகிழ்வு என்பதாகும். இதில் பிறந்தவர்கள் மகிழ்வான இனிமையான வாழ்க்கையை விரும்புவார்கள். செய்யும் செயலில் திறமையுடன் இருப்பார்கள். இவர்களின் குறிக்கோளே மகிழ்ச்சியான வாழ்க்கை தான்.
6. அதிகண்டம் -
பெரிய இடரல்கள் (அதி யோகம்) : அதி என்றால் பெரிய என பொருள் படுகிறது. கண்டம் என்றால் துன்ப நிலை என்று பொருள். இந்த யோகத்தின் பெயரே பெரிய துன்பம் என்று பயமுறுத்துகிறது.
துன்பம், தொல்லை, துயரம் தாக்கும். மற்றவர்களுக்கு தொல்லைகளையும், இடரல்களையும், துன்பங்களையும் ஏற்படுத்துவார்கள். பிறரை துன்பப்படுத்தி அதில் மனம் மகிழ்ச்சியடைவார்கள்.
யாம் பெற்ற துன்பம் பெறுக வையகம் என்ற குறுகிய மனப்பான்மை உடையவர்களாக இருப்பதுண்டு.
7.சுகர்மம் -
அறம் (சுக யோகம்) : இது சிறப்பான யோகம். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன், பேரும் புகழும் பெற்று நல்ல வாழ்க்கை வாழக் கூடியவர்கள்.
பற்று, பாசம், ஈகை உடையவர்கள். கடவுள் நம்பிக்கை, கடவுளுக்கான செயல்களை செய்வது, ஆலயங்களுக்கு பயனிப்பது போன்றவற்றை மேற்கொள்வதில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். நட்பு சுற்றங்களை விரும்பி மதிப்பவர்களாக இருப்பார்கள்.
8. திருதி -
துணை (திரு யோகம்) : இது அசுப யோகம். இதில் பிறந்தவர்கள் மன உறுதி கொண்டவர்கள், தன்னம்பிக்கை உடையவர்கள்.
தான் ஏற்றுக்கொண்ட செயலை விடாப்பிடியாக முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடியவர்கள். மன திடம் மிக்கவர்கள்.


Post a Comment
0Comments