பஞ்சாங்கத்தின் நாமயோகத்தின் பலன்கள்-1 - 27 யோகங்கள் - Astrology Tamil

Agathiyan
By -
0

பஞ்சாங்கத்தின் அங்கம் யோகம் -2





9. சூலம் - 

சில திசைப் பயண இடையூறுகள் (சூல யோகம்) : இது அசுப யோகம். சூலம் என்பதை வேண்டாதது என பொருள் கொள்ளலாம். மேற்கில் சூலம் என்றால், மேற்கில் செல்ல வேண்டாம் என்று பொருள் படுகிறது அல்லவா. எந்த திசையில் சூலமோ அது ஆகாதது.


இந்த யோகம் உடையவர்கள் முன்கோபக்காரர்களாகவும், முரட்டு குணம் உடையவர்களாகவும், எதியும் கூர்ந்து அராயாமல் எடுந்தறிந்து கையாள்பவர்களாகவும், சோம்பேரிகளாகவும், எடுத்தெரிந்து பேசும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பர்.


ஆணவத்தினால் எவரையும் மதிக்க மாட் டார்கள். எவருடனும் ஒத்து போகாமல் முரண்டு பிடிப்பவர்கள். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதுடன் வீண்வம்பு, சண்டை பிடிக்கவும் செய்வதுண்டு.


10. கண்டம் - 

இடர்பாடுகள் (கண் யோகம்): இது அசுப யோகம். கண்டம் என்ற சொல்லே, இடர்பாடு என்ற பொருள் படுகிறது. இடர்பாட்டு யோகம் என்றால் விளக்கி சொல்லத் தேவை இல்லை.


இந்த யோகம் கொண்டவர்கள் அடிக்கடி இடர்பாடுகளையும், துன்பங்களையும், துயரங்களையும், உடல் நோக்காடுகளையும் சந்திக்க வேண்டி வரும். நல்ல மணம் இருக்காது. சொல்லும் செயலும் சிறப்பாக இருக்காது.


11. விருத்தி - 

ஆக்கம் (விரு யோகம்): இது சுப யோகம். இதில் பிறந்தவர்கள் ஆக்கம் உடையவர்களாக இருப்பர். செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.


கடவுள் நம்பிக்கையும், நல்ல பண்புகளும் உள்ளவர்கள். ஈகை தரும குணம் உடையவர்களாகவும், திருப்பணிகள் செய்பவர்களாக இருப்பார்கள்.


12 துருவம்  -

 நிலையான தன்மை பெறுதல் (துரு யோகம்): இது அசுப யோகம், இதில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்கள். யாருடனும் அவ்வளவாக பழக மாட்டார்கள், தன்னலம் சார்ந்து எதையும் சிந்திப்பவர்கள்.


எப்படி தாமரை இலை தண்ணிரில் மிதந்தாலும் தன்னிடம் தன் இலையில் தண்ணிர் ஒட்டாமல் பார்த்துக்கொள்கிறதோ, அதே போல, பிறரிடம் தயங்காமல் பலன் பெற்றாலும், நன்றிக் கடன் என்பது இல்லாமல் இருப்பார்கள்.


தீய, ஏமாற்றும் எண்ணம் உடையவர்கள். வாய்ப்பு கிடைக்கும் போது பழி தீர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள்.


13. வியாகாதம் - 

பாம்பு முதலானவற்றால் அச்சம் (வ்யா யோகம்): இது அசுப யோகம்.


இந்த யோகத்தில் பிறந்தவர்கள் முன்கோபமும், முரட்டுத்தனமும் உடையவர்களாக இருப்பர்.


இவர்கள் உறவுகளோடோ அல்லது நண்பர்களோடோ ஒன்றிச் செல்லாமல், தன்னிச்சையாக செயல்படக் கூடியவர்கள்.


நல்லெண்ணம் இல்லாத இவர்கள் சூது வாது, கபடம் உள்ளவர்களே எனலாம். மன உறுதி இல்லாத இவர்கள் எண்ணங்களையும், செயல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள்.


14 அரிசனம் - 

மகிழ்ச்சி (ஹர்ஷணம் - ஹர் யோகம்): இது சுப யோகம். சொல்லிய சொல் தவறாதவர்கள். புகழுடன் வாழ பிறந்தவர்கள்.


இனிமையாகவும் மென்மையாகவும் அணைவரிடமும் பழகக் கூடியவர்கள். பின் நாட்களில் நடக்கும் என்பதை ம்ன்கூட்டியே கணிக்கும் திறன் இவர்களுக்கு இருப்பதுண்டு. மகிழ்வான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள்.


16. சித்தி - 

வல்லமை (சித் யோகம்): இது சுப யோகம். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதையும் தீர அராயும் குணம் உடையவர்கள். தியானம், யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள்.


திருப்பயணம் மேற் கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள். இமயம் வரை பயணம் மேற்கொள்வார்கள். கடினமான பயணங்களை மகிழ்வாக மேற் கொள்வதுண்டு செல்வமும், செல்வாக்கும் உடையவர்கள். நல்ல குணம், உதவும் மனப்பான்மை உடையவர்கள்.


17. வியதீபாதம் - 

கொலை (விய யோகம்) : இது அசுப யோகம். இதில் பிறந்தவர்கள் தன்னலம் மட்டுமே பேனுபவர்களாக இருப்பார்கள். துன்பங்களையும், துயரங்களையும், நொடிப்புகளையும் அடிக்கடி சந்திக்க வேண்டிவரும்.


வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிந்தித்து, செயல் படாமல் அவசர முடிவால் தொல்லைகளை சந்திப்பார்கள்.

Post a Comment

0Comments

Post a Comment (0)