பஞ்சாங்கத்தின் அங்கம் யோகம் -3
18. வரியான் -
காயம் (வரீயான் -வரீ யோகம்): இது சுப யோகம். இதில் பிறந்தவர்கள் எதிலும் தலைமை தாங்கும் தகுதி உடையவர்களாக இருப்பர்.
நல்ல மன திடனும், எடுத்த செயலை வெற்றியுடன் முடிக்கும் திறனும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையுடையவர். இவர்கள் செய்யும் செயலால் இவர்களுக்கு புகழ் பெறக் கூடிய வகையில் இருக்கும்.
சிறு வயதிலேயே வெளி நாடுகளுக்கு தொழில் வாய்ப்பாக உயர் பதவியில் இருந்து சென்று வருவர். வெளி நாட்டவர்கள் இவர்களின் அறிவு ஆற்றலை கண்டு வியக்கம் வன்னம் இவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.
இந்த நிலையை இவர்கள் அடைய வேண்டும் என்றால், பெற்றோர் இறை வழிபாடுகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
19. பரிகம் -
தாழ்வு (பரி யோகம்): இது சுப யோகம். இதில் பிறந்தவர்கள் தனித்தன்மை வாய்ந்து விளங்குவர். இவர்களின் பாதை தனியாக இருக்கும். இவர்களின் கொள்கைகளும், குறிக்கோளும் மிக உயர்ந்தவையாக இருக்கும்.
இவர்களுக்கு என்று பாதை அமைத்து வாழ்வார்கள், அதிலிருந்து சற்றும் விலக மாட்டார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். சொல்லிய சொல் செயலாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதில் தவறு ஏற்படுகிறது என்றால் இவர்களால் அதை தாங்கிக் கொள்ள இயலாது.
20. சிவம் -
காட்சி (சிவ யோகம்): இது சுப யோகம். இந்த யோகம் கொண்டு பிறந்தவர்கள் கடவுள் வழிபாடுகளின் தீவிரம் உடையவர்கள்.
தியானம், யோகம், பக்தி, ஞான மார்க்கத்தில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருப்பார்கள். ஞானிகள், மகான்கள், யோகிகள், பெரியோர்களை சந்திப்பதில் கூடுதல் ஆர்வமுடையவர்கள்.
21. சித்தம் -
திறன் (சித் யோகம்): இது சுப யோகம். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் மன திடன் மிக்கவர்களாகவும், எஉத்த செயலை முடிப்பதில் திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அச்சம் என்பது மடமை என்ற என்னம் கொண்டவர்கள் இவர்கள்.
உறுதியான சிந்தனை உடையவர்கள். எடுத்த முடிவுகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இலக்கணம், வரலாறு, கடவுள் வழிபாட்டு முறைகள் இவற்றில் நாட்டம் கொண்டிருப்பர்.
22. சாத்தியம் -
புகழ் வாய்ப்பு (சாத் யோகம்): இது சுப யோகம். யோகத்தின் பெயரே புகழுடன் வாய்ப்பு என்று உள்ளதால், இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதையுமே தனக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்வார்கள்.
பல பெண்களை வசியம் செய்து கொள்ளும் வாய்ப்பும் கூட இவர்களுக்கு உண்டு.
சாத்தியம் - புகழ் வாய்ப்பு (சாத் யோகம்): இது சுப யோகம். யோகத்தின் பெயரே புகழுடன் வாய்ப்பு என்று உள்ளதால், இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதையுமே தனக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்வார்கள்.
பல பெண்களை வசியம் செய்து கொள்ளும் வாய்ப்பும் கூட இவர்களுக்கு உண்டு.
23. சுபம் -
காவல் (சுப யோகம்): பெயரே சுபம் என்றுள்ளதால், மறு பேச்சு இல்லாமல் இது சுபமான யோகம் தான்.
இனிமையான மென்மையான குணம் கொண்டவர்கள் இவர்கள். மகான்கள், யோகிகள், ஞானிகள், பெரியோர்களுக்கு தொண்டாற்றுவதில் விருப்பம் உடையவர்கள். திருப்பணிகள், பொது தொண்டு செய்வதிலும் இவர்களுக்கு நாட்டமிருக்கும்.
24 சுப்பிரம் -
தெளிவு (சுப் யோகம்): இது சுப யோகம். நல்ல மன சிந்தனை என்பது தானே தெளிவு, அதற்கு ஏற்ப நல்ல தெளிவான சிந்தனை ஓட்டம் கொண்டவர்களாக விளங்குவர்.
நல்ல சிந்தனை இவர்களை கடவுள் நம்பிக்கை, கடவுள் வழிபாடு ஆகியவற்றில் ஈடுபடுத்தும்.
எல்லாம் அவன் செயல் என கடவுள் மீது பாரத்தை வைப்பதால், மனம் என்றும் அலை பாயாது.
தனக்கு நடக்கும் தீயவையும், தான் செய்யும் வெற்றி செயலும் அவன் தந்ததே என கடவுள் நம்பிக்கையில் ஆழமாக ஊரி வாழ்வார்கள்.
25. பிராம்மம் -
மாயை (பிராம்மியம் - பிரா யோகம்): இது சுப யோகம். அறிவை முழுமையாக பயன்படுத்து வாழ்வார்கள். எதை செய்வதற்கு முன்னும், ஆழ சிந்தித்து, அதில் ஈடுபடுவார்கள்.
நல்லவர்கள் வல்லவர்களுடன் மட்டுமே பழகுவார்கள், நல்ல சிந்தனை உடையவர்கள்
26 .மாஹேத்திரம் -
படைப்புகளை பற்றிய அறிவு (ஐந்திரம் - ஐந் யோகம்): இது சுப யோகம். இதை சிலர் ஐந்திரம் என்றும், சிலர் மாகேந்திரம் என்ற பெயரிலும் அழைப்பதுண்டு.
இந்த யோகத்தில் பிறந்தவர்கள் செய்யும் செயலில் வெற்றி காண்பவர்கள். ஆழ்ந்து சிந்தனை செய்பவர்கள். வரும் நாட்கள் குறித்த பொருள் உரைப்பவர்கள். அருள்வாக்கு, ஆருடம் போன்றவற்றிலும் இவர்கள் சிறந்து விளங்குவர்.
27. வைத்திருதி -
பேய்களால் தொல்லை (வை யோகம்): இது அசுப யோகம். இதில் பிறந்தவர்கள் தன்னலம் மட்டுமே குறிக்கோளாக வாழ்பவர்கள். தற்பெருமையே வாழ்க்கை என்ற சிந்தனையில் செயல்படுவார்கள்.


Post a Comment
0Comments