வாஸ்து திசை பலன்
📚வடக்கு வாழ்கிறது🐍 தெற்கு தேய்கிறது❓‼️
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தமிழக அரசியலில் நீண்ட காலமாக ஒரு சொலவடை இருந்து கொண்டு தான் உள்ளது. அது என்னவென்றால் " வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது", என்று அடிக்கடி மேடைகளில் அரசியல்வாதிகள் முழங்குவார்கள்.
🎋வடக்கு ஏன் வாழ்கிறது ❓
🐍தெற்கு ஏன்தேய்கிறது❓
ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் பாரம்பரியமாக 🌞கிழக்கு திசையும் 🌳🌳🌳வடக்கு திசையும் சுபிட்ச்த்திற்கு உரியதாக, கூறுவார்கள்.
இவை இரண்டும் "கீழ்திசை" என்று அழைக்கப்பார்கள்.
🐍தெற்கும்🌑 மேற்கும் சற்று பாதிப்பை தரும் திசை என்று கூறுவார்கள். இந்த இரண்டு திசையையும், "மேல் திசை" என்று அழைப்பார்கள்.
கிழக்கு திசைக்கு அதிபதி இந்திரன்.
வடக்கு திசைக்கு அதிபதி குபேரன்.
வடகிழக்கு திசைக்கு அதிபதி ஈசானன்.
மேற்கு திசைக்கு அதிபதி வருணன் .
தெற்கு திசைக்கு அதிபதி எமதர்மராஜன்.
தென்மேற்கு திசைக்கு அதிபதி நைருதிபகவான்.
தனிமனித வாழ்வில் ஒருவரின் செல்வ நிலையே பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. காசு இல்லாதவனை உற்றார் உறவினர்கள் கூட மதிக்க மாட்டார்கள். மேலும் கிழக்கு திசை என்பது ஆரோக்கியத்தை தரவல்லது, வடக்கு திசை என்பது செல்வ செழிப்பை தரவல்லது இந்த இரண்டும் ஒரு வீட்டில் சரியாக அமைந்துவிட்டால் அந்த வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.
கிழக்கிற்கும் வடக்கிற்கும் மையமான வடகிழக்கு எனப்படும் கோண திசையானது, ஈஸ்வரனுக்கு உரிய திசையாக குறிக்கப்படுகிறது.
ஆக வடக்கு,, கிழக்கு, வடகிழக்கு ஆகிய மூன்றும் ஒரு இடத்தில் தாழ்வாக அமைந்து, சரியான வாஸ்து அமைப்பு படி அமைந்து விட்டால், அந்த இடத்தில் ஆரோக்கியம், வம்சவிருத்தி, மனநிம்மதி, செல்வ செழுமை தன்னால் உண்டாகிவிடும். அது சரியாக இடத்தில் இருக்கும் நபர்கள் சிறு முயற்சி செய்தால் கூட, அது அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தந்து விடுகிறது.
மேல்திசை எனப்படும் தெற்கும் ,மேற்கும் , இந்த இரண்டிற்கும் மையமான தென்மேற்கு ஆகிய மூன்றும் உயரமாக அமைய வேண்டும். இவைகள் உடல் பலத்தையும் , தம்பதிகள் ஒற்றுமையையும், வீட்டு தலைவர்களின் நிலையையும், அந்த வீட்டில் வசிப்பவர்களின் ஆயுளையும் குறிக்கிறது.
வடக்குப் பகுதியின் கிழக்குப் பகுதியும் சரியாக அமைந்துவிட்டால் ஒருவரை வாழ்விக்கிறது ,
தெற்குப் பகுதியின் மேற்கு பகுதியில் சரியாக அமைந்துவிட்டால் ஒருவனுக்கு உண்டாகும் துன்பங்களை துயரங்களை தேய்விக்கிறது.
இதுதான் "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என மருவி விட்டது.
ஓம் ஸ்ரீவாஸ்துவ பகவானே போற்றி போற்றி

Post a Comment
0Comments