புராண மற்றும் ஜோதிட தகவல்கள் அறியவே நட்சத்திரங்களை கொண்டு பழமொழிகள் உண்டாக்கப்பட்டன. ஆனால் மக்கள் அதை தவறாக புரிந்து கொண்டு தங்கள் நட்சத்திரத்துடன் தொடர்புபடுத்தி மனசஞ்சலம் கொள்கின்றனர்.
💥மகம் ஜெகம் ஆளும் -
அங்கே சூரியன் ஆட்சி பெற்றுவது மற்றும் கீரிட வடிவத்தை சொல்லும் பழமொழி
💥பரணி தரணி ஆளும் -
அங்கே சூரியன் உச்சம் பெறுவதால் அது தரணி ஆளும் குறிக்கும்.
💥பூராடம் போராடும் என்பதன் அர்த்தம் -
பூர்வ ஆஷாட என்பதன் அர்த்தம் முன்னின்று வெற்றிக்கு செல்லுதல் என்பதாகும். மேலும் பூராடம் நூலாடாது என்ற பழமொழி வியாபரத்திற்காக பல ஜோதிடர்களால் புகுத்தப்பட்டது.
பெண் 💥மூலம் நிர்மலம் -
அது நிர்மூலமல்ல. தூய்மையான காற்று வீசும் நிர்மல மார்கழியை குறிக்கும். பெண் மூலம் நிர்மலம் அதாவது தூய்மையானது. மேலும் சூரியன் நிர்மல வைகுண்ட வாசலை அடைவதை குறிக்கும் பழமொழி.
🌟கேட்டை அண்ணணுக்கு ஆகாது -
கேட்டை என்பது வராஹரின் நட்சத்திரம். அது ஹிரண்யகசிபு என்ற அரக்கனின் அண்ணணான ஹிரண்யன் என்பவனை கொன்றது வராஹம் என்பதை உணர்த்தவே இப்பழமொழி.
🔥சித்திரை அப்பன் தெருவிலே -
தந்தை காரக கிரகமான சூரியன் தட்சிணாயணத்தில் பாதள லோகத்தில் நீச்சமாகும் காலத்தை ஆதாவது பலம் இழத்தலை குறிப்பதே இப்பழமொழி கூறும் கருத்து அன்றி வேறு அர்த்தம் இல்லை


Post a Comment
0Comments