குருவும் சந்திரனும் ஏழில் அமர்ந்தால்
மணவாழ்வை பாதிக்குமா?
குரு தனித்து ஏழில் ஆட்சிபெற்றாலே பாதகம்
தரும். கூடவே வளர்பிறைச்சந்திரனும்
இணைந்தால் மணவாழ்வு பாதிக்கும்.
மகரலக்ணத்திற்கு சந்திரன் ஒளிநிலையில்
ஆட்சி பெற்றாலே கேந்திராதிபத்ய தோஷம்
சற்று செயல்படும்.
கூடவே உச்சகுருவும் இணைந்தால் மணவாழ்வு
நிலைக்காது. அதே போல மிதுன கன்னி
லக்ணத்திற்கு ஏழில் ஓளிச்சந்திரன் குரு இணைவு மணவாழ்வு பாதிக்கும்.
அதே சமயம் குரு இருள்சந்திரனுடன் இணையும்போது பாதிப்பை தருவதில்லை.
மேலும் குருசந்திரன் இணைவில் குரு வக்ரம்
பெற்றாலும் பாதிப்பை தருவதில்லை.
மற்றபடி இருவரும் ஆட்சி உச்சம் பெறாமல்
நட்பு பகை நிலையில் இருந்தாலும்
பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
எனவே பொத்தாம்பொதுவாக குருசந்திரன்
ஏழில் மணவாழ்வு சிறக்காது என்பது
உண்மையல்ல.
இருவரும் இணையும் வீட்டைப்பொருத்தே
பலன் இருக்கும்.


Post a Comment
0Comments